செய்திகள் :

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!

post image

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார் என்று பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததுடன் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையையும் இழந்தது.

இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டாலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0-3 என்ற கணக்கில் முழுமையாக தொடரை இழந்து ஒயிட்வாஸ் ஆனது பெறும் விமர்சனத்தை எழுப்பியது.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதால் அவருக்குப் பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித்துக்குப் பிறகு பும்ராவே முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பார்டர் - கவாஸ்கர் டிராபி நடந்து கொண்டிருந்த போது, ​​இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மாவும், கௌதம் கம்பீரும் ஒத்துப்போகவில்லை என்றும், அது அணியை பாதிக்கும் என்றும் யூகிக்கப்பட்டது.

பிசிசிஐ அதிகாரிகள், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மும்பையில் நேற்று விவாதித்தனர்.

சொந்த மண்ணில் ஒரு ஒயிட்வாஷ் உள்பட கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-இல் இந்திய அணி தோல்வியடைந்தது.  அணித் தேர்வுக்குழு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டனாக தொடர ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளார்.

சரியான நேரத்தில் இந்தியாவை வழிநடத்த தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு தனது முழு ஆதரவையும் வழங்க சர்மா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒருநாள் போட்டிகள் இன்னும் ஆறு வாரங்களில் இந்திய அணி விளையாட இருப்பதால், கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது. இது அணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. 37 வயதான ரோஹித் சர்மா அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல்கள் ஊகங்களில் பரவி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னரே ரோஹித் சர்மா அணியில் இருப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்வு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக... மேலும் பார்க்க

100-வது ஒருநாள் போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் இன்று (ஜனவரி ... மேலும் பார்க்க

தோனியின் துணிச்சல் யாருக்கும் இல்லை! -யுவராஜ் சிங்கின் தந்தை சுவாரசியம்

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்த ‘யுவராஜ் சிங்கின்’ தந்தை யோக்ராஜ் சிங், மகேந்திர சிங் தோனியை வெகுவாகப் பாராட்டி பேசியுள்ளார். எம். எஸ். தோனி மீது யுவராஜின் தந்தை அதிருப்தியில் இருப்பதெ... மேலும் பார்க்க

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள ச... மேலும் பார்க்க