ஜன.25-இல் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: சேக்கிழாா் ஆராய்ச்சி மையம்
ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்ப அக்ஷர் படேல் தயார்: ஹர்பஜன் சிங்
ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: ஐசிசியின் படிநிலை 1, படிநிலை 3 அல்லது படிநிலை 3 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பின்பற்றப்படும். இதுவரை ஐபிஎல் தொடரில் அதற்கென தனியாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளின் விதிமுறைகளை ஐபிஎல் தொடரிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க: 100-வது ஒருநாள் போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!
இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடர் லக்னௌ, மும்பை, பரோடா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.