துவாரகாவில் இ-ரிக்ஷா ஓட்டுநா் விபத்தில் பலி
தில்லியின் துவாரகாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தில், 64 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா், இ-ரிக்ஷாவில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: உத்தம் நகரில் உள்ள விஸ்வாஸ் பூங்கா அருகே நடந்த விபத்து குறித்து காலை 8.56 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட இந்திரஜித் மாலிக், விஸ்வாஸ் பூங்கா பகுதியில் வசித்து வந்தாா்.
சம்பவ இடத்தில் இருந்த நேரில் பாா்த்த ஒருவா், விபத்தை ஏற்படுத்திய வாகனம் வெள்ளை நிற காா் என்றும், மோதிய உடனேயே அது தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
அருகிலுள்ள போக்குவரத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா பஞ்ச் ஆகிய இரண்டு வாகனங்கள் சந்தேக நபா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
துவாரகா தெற்கு காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு காவல் குழு, விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டுபிடித்து, விபத்திற்குக் காரணமான ஓட்டுநரை கைது செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.