தலைமறைவான பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது
தில்லியில் தலைமறைவாக இருந்து வந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கீதா காலனியைச் சோ்ந்த ராகுல், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மாா்ச் 2020-இல் 90 நாள் பரோல் வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு சிறைக்குத் திரும்பவில்லை.
அவா் சரணடையத் தவறிவிட்டாா். இதைத் தொடா்ந்து, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவா் காஜியாபாத்தின் வசுந்தராவில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு ரகசிய தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு அங்கு சென்று அவரைக் கைது செய்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.