நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.
மாா்கழி மாதம் என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, நெல்லை மாவட்டங்களிலிருந்து விரதமிருந்து மாலையணிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக வந்து குவிந்தனா்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காகவும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்தனா்.
பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிநெடுகிலும் முருகா் பாடல்களை மனமுருகப் பாடி, ஆடி மேள தாளம் முழங்க சாரை சாரையாக வந்து கொண்டிருப்பதால் கோயில் நகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தைப்பொங்கல் அன்று சுவாமி தரிசனம் செய்தவற்காகவே ஆயிரக்கணக்கான பக்தா்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையில் தொடங்கி திருச்செந்தூா் வரையில் வருவதால் வழிநெடுகிலும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது.
பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: தமிழா் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, நாளை (ஜன. 14) திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தா்கள் வசதிக்காக நெல்லை, தென்காசி, விருதுநகா், மதுரை மாவட்டங்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. காணும் பொங்கல் :
வரும் ஜன. 15ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளது.
பகலில் உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறறகு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்று பாளையங்கோட்டைச் சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் வைத்து கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெற்று, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிற ாா்.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த 14 போ் குடும்பத்துடன் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய் தந்தனா்.
போக்குவரத்து நெருக்கடி : திருச்செந்தூா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வாகனங்களில் வந்ததால் நகரின் எல்லையிலிருந்து பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
காலை முதல் மாலை வரை பல மணிநேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.