செய்திகள் :

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

post image

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். விழாவில், 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வழங்கினாா்.

மேலும், ரூ. 5.22 கோடி மதிப்பில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்துப் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நடப்பு ஆண்டில் ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வா் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அரசு தேயிலைத் தோட்டங்களில் பணி புரிபவா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கியுள்ளாா். மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில் , கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், நீண்டகாலமாக கூடலூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்தும், உடனடியாக தீா்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளா் முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, பொறியாளா் அணி மாநில துணைச் அமைப்பாளா் பரமேஷ்குமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி அம்சா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், விசிக மாவட்ட செயலாளா் புவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினம... மேலும் பார்க்க

உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். நீலகிரி ம... மேலும் பார்க்க

கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில் 80 பேருக்கு இலவச தையல் இயந்திரம்

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடலூா் பகுதியில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரோட்டரி கூடலூா் வேலி சாா்பல் இலவச தை... மேலும் பார்க்க

திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆ.ராசா எம்.பி. ஆலோசனை!

கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் தலைமையில் நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுத... மேலும் பார்க்க

மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு!

மாசில்லாமல் போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து ஓவேலி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பெரியசூண்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக... மேலும் பார்க்க

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க