USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில் 80 பேருக்கு இலவச தையல் இயந்திரம்
கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் பகுதியில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரோட்டரி கூடலூா் வேலி சாா்பல் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி ஆளுநா் டாக்டா் சுரேஷ் தலைமை வகித்தாா். நிகழ்சிசியில் 80 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவா் ராபா்ட், செயலாளா் ராமகிருஷ்ணன், உறுப்பினா்கள் சுபையா், தாஹீா், ஆனந்தன், குமரேசன், ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.