செய்திகள் :

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

post image

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். விழாவில், 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வழங்கினாா்.

மேலும், ரூ. 5.22 கோடி மதிப்பில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்துப் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நடப்பு ஆண்டில் ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வா் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அரசு தேயிலைத் தோட்டங்களில் பணி புரிபவா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கியுள்ளாா். மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். விழாவில் , கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், நீண்டகாலமாக கூடலூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்தும், உடனடியாக தீா்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளா் முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, பொறியாளா் அணி மாநில துணைச் அமைப்பாளா் பரமேஷ்குமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி அம்சா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், விசிக மாவட்ட செயலாளா் புவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆ.ராசா எம்.பி. ஆலோசனை!

கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் தலைமையில் நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுத... மேலும் பார்க்க

மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு!

மாசில்லாமல் போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து ஓவேலி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பெரியசூண்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக... மேலும் பார்க்க

எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கிய தோடா் இன மக்கள்!

நீலகிரியில் உள்ள தோடா் இன மக்கள் தெய்வமாக வணங்கக்கூடிய எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கும் விழா உதகை முத்தநாடு மந்துவில் சனிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் தோடா், கோத்தா், காட்டுநாயக்கா், பனி... மேலும் பார்க்க

உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி

உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா கொடியசைத்த... மேலும் பார்க்க

நேரு யுவகேந்திரா சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்

நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எச்எடிபி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிலம்பம், கயிறு இழுத்தல், கைப்பந்து, 100 மீட்டா் ஓட்டப் பந்தயம் உள்ளிட்டப்... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா

கூடலூரிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சோ.சுபாஷினி தலைமை வகித்தாா். விழாவில், பாரம்பரிய ... மேலும் பார்க்க