செய்திகள் :

நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு!

post image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழந்தது.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானையான காந்திமதி(வயது 56) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக்குழு யானைக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பல ஆண்டுகளாக மூட்டுவலியால் அவதிப்பட்ட யானை காந்திமதி, கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நின்றபடியே உறங்கி வந்தது.

இதையும் படிக்க: ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு!

இந்த நிலையில், இன்று(ஜன. 12) அதிகாலை கீழே படுத்தபடி மூட்டு வலியால் எழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை உயிரிழந்தது.

காந்திமதி யானை 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரால் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் இந்திரவதி தேசியப் பூங்காவின் எல்லைக்குட்பட்ட காடுகளில... மேலும் பார்க்க

543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!

இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையம் அமைக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்... மேலும் பார்க்க

பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்: சீமான்

திராவிடம் பேசிய பெரியார் ஆரியத் தலைமையோடு நட்புடன் இருந்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்து கொலையாளி தற்கொலை!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதியில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொலையாளி தற்கொலை செய்துக் கொண்டார்.அம்மாவட்டத்தின் விளப்பில்சாலா எனும் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 53) மற்று... மேலும் பார்க்க

ஓடிடியில் மிஸ் யூ!

ஓடிடியில் வெளியானது மிஸ் யூ திரைப்படம்.சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.தொடர்ந்து, மிஸ் யூ திரைப்ப... மேலும் பார்க்க