செய்திகள் :

பூரண மதுவிலக்கை விசிக ஆதரிக்கிறது: திருமா

post image

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பூரண மதுவிலக்கு தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதிரிக்கிறது என தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட மாநாடு லாக்கான் மைதானத்தில் சனிக்கிழமை (ஜன. 11) இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு தெற்கு மாவட்ட தலைவர் எம்ஏ முஹம்மது ஜகரிய்யா தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசகர் மருத்துவர் அப்துஸ்ஸமது, எஸ்.எம். அனீசுர்ரஹ்மான், எம்ஜெ மஸ்ஹீது அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக எம்பியும் நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், விசிக தலைவருமான தொல்‌. திருமாவளவன் எம்.பி., தேசிய அமைப்புச் செயலாளர் டி. முஹம்மது பஷீர் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கே. நவாஸ்கனி எம்.பி., விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தொல். திருமாவளவன் எம்.பி. பேசியது: இந்த மாநாட்டில் கொண்டு வரப்பெற்ற தீர்மானமான பூரண மதுவிலக்கை விசிக சார்பாக ஆதரிக்கிறேன். பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவில் இஸ்லாமியர் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பெற்ற வக்பு வாரியச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்.

மோடி தலைமையிலான அரசு கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு சட்டங்களை ஒரு நாளில் இயற்றி வருகின்றனர் . இஸ்லாமியர்களைப் போன்று கிறித்தவர்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். தேசிய அளவில் ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்து நின்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான் நாம் நடத்துகிற யுத்தம். தேசிய அளவில் வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம்முடைய செயல்திட்டம்.

2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் இந்திய யூனியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்கு நாம் இணைந்து பயணிப்போம் கைகோர்த்து களமாடுவோம் என்றார் திருமாவளவன் எம்.பி.

இதையும் படிக்க:விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி

மாநாட்டில் கே.எம். காதர் மொய்தீன் பேசியது: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் நம்மால் பிரிக்கப்பட்ட 52 மாவட்டங்களிலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல் மாநாடு லால்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. லால்பேட்டை மதராஸகள் 150 ஆண்டுகளுக்குமுன்பு தோன்றியது. இந்தியாவில் 150 கோடி மக்கள்தொகையில் 25 கோடி பேர் முஸ்லிம்கள். உலகத்தில் 193 நாடுகளில் 57 நாடுகள் முஸ்லிம் நாடுகள், 72 நாடுகள் சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகள்.

இந்த நாடு ஜனநாயக நாடு; மக்களின் எண்ணத்தைச் செயல்படுத்தக்கூடிய நாடுதான் ஜனநாயக நாடு. இருக்கைகளில் ஒன்றில் திருக்குரான் சொன்னபடி வாழ்க்கை நடத்த வேண்டும். மற்றொரு கையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தல். இதன்படி நடந்தால் சிறந்த இந்தியர்கள் சிறந்த முஸ்லிம்கள் ஆவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்மொழி சிறக்க அரும்பாடு பட்டார். அதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்குமுன்பு சிந்துவெளி நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்துதான் அந்த மொழி சென்றது. தற்போது அந்த மொழி புரியவில்லை. அந்த மொழியைக் கண்டறிந்து கூறுபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாகத் தருவதாக அறிவித்துள்ளார். அதாவது 90 கோடியாகும். தமிழ்நாட்டின் நாகரிகம்தான் உலகம் முழுவதும் சென்றது. லால்பேட்டை மதராஸகளுக்குதான் இந்த மொழியை கண்டறியும் ஆற்றல் உள்ளது. ஆகவே நாம் அந்த பரிசினை பெறுவோம் என்றார்.

கனிமொழி எம்.பி. பேசியது: இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறி இருக்கக்கூடிய சகோதரர்களும் சகோதரிகளும் ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு சென்றபோது தங்களுடைய முதுகிலே இருக்கக்கூடிய அந்த ஜாதி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு சென்றார்கள். எந்த ஜாதியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள், தன் வாழ்நாள் எல்லாம் போராடினாரோ, அவரைப் பற்றி சில பேர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த பெயரைச் சொல்லக்கூட தகுதி இல்லாதவர்கள் விமர்சிக்கிறார்கள். நமக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தன் வாழ்நாளெல்லாம் போராடிய தந்தை பெரியார் அவர்கள் இன்று எந்த ஜாதியை சேர்ந்தவன் என்று நினைவு தெரியாமல் இன்று மனிதர்களாக சகோதரர்களாக தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்று இஸ்லாமியர்களைப் பார்த்து தந்தை பெரியார் அவர்கள் பாராட்டிய அந்த ஒரு வரலாறு நமக்கு உண்டு.

சிறுபான்மையினருக்கு எதிராக ஓர் ஆட்சி; ஒவ்வொரு சட்டத்திலும் ஒவ்வொரு வழியிலும் அங்கு இருக்கக்கூடிய சகோதரிகளையும் சகோதரர்களையும் அச்சுறுத்தக் கூடிய ஒரு சூழலை இந்த நாடு முழுவதும் உருவாக்கி ஒரு பிளவை உருவாக்கி அதில் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கம்தான் பாஜக. ஆனால், அவர்களுடைய முயற்சிகள் தமிழ்நாட்டிலே எடுபடவே இல்லை. இஸ்லாமியர்கள் மற்ற மாநிலங்கள் எல்லாம் மதம் மாறியபோது, மொழியும் மாறி இருக்கிறார்கள். ஆனால் இங்கே நாம் தமிழ் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர்களாக எழுந்து நிற்கிறோம், ஒன்றாக நிற்கிறோம் என்றார் கனிமொழி எம்.பி.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது: லால்பேட்டையில் மாநாடு போன்று திமுக கூட்டணிக்கு ஓட்டு விழும். கூட்டணியைப் பொறுத்து ஓட்டு விழுகிறது. நாங்கள் உறவாக வாழ்ந்து வருகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இளைஞராகவே செயல்பட்டு வருகிறார். தொல். திருமாவளவன் எம்.பி.யாக இருப்பதால் சிதம்பரம் பகுதி அனைத்து மக்களும் இணக்கமாக இருப்பதற்கும், அமைதியாகவும் பாதுகாப்பாக மக்கள் இருப்பதற்கு காரணமாகும்.

விசிக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் நீண்ட நாள்கள் சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும் கோப்பு ஆளுநரிடம் உள்ளது. அவர் கையெழுத்திட்டால்தான் விடுவிக்கப்படுவர். திமுக. இஸ்ஸாமியர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று உள்ளோம் என்றார் அமைச்சர்.

கூட்டத்தில் ம. சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, லால்பேட்டை அரபுக்கல்லூரி முதல்வர் ஏ.நூருல்அமீன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்த மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி: ஜன.17-இல் திமுக வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனவரி 17ஆம் தேதி திமுக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது. விதிமுறை மீறல்கள் இல்லாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்திய அமைச்சர் முத்துச்சாமி, 20... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பாஜக ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தமிழக பாஜக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அற... மேலும் பார்க்க

‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 67% நிறைவு

தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

விவேகானந்தர் புகழைப் போற்றி வணங்குவோம்: அண்ணாமலை

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உ... மேலும் பார்க்க