தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்
‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச்சியில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவிற்கு நான் சென்றபோது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது.
எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் தருகின்றனர். அயலகத் தமிழர்களால் பாலைகள் சோலைகளாகின. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டில் குடியேறிய மக்களால்தான் பாலைகள் சோலைகளாகின. வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 67% நிறைவு
அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதிநாளான இன்று அரங்கத்தில் இருக்கின்றனர். வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையின் மைல்கல்லாக உள்ளது. வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு மிக நெருக்கமான திட்டம். 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆசிரியர்கள், கலைஞர்கள் தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிப்பர். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். ஆசிரியர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி.
மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.