தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி: ஜன.17-இல் திமுக வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனவரி 17ஆம் தேதி திமுக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது.
விதிமுறை மீறல்கள் இல்லாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்திய அமைச்சர் முத்துச்சாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஈரோடு இடைத்தேர்தல் அடித்தளமாக இருக்கும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பாஜக ஆலோசனை
வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 17ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளாகும். பிப்.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.