சேவல் சண்டை போட்டிகளைத் தடுக்க டிரோன்களை பயன்படுத்தும் காவல்!
Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விழாவிற்கான அழைப்பு இந்தியாவிற்கும் வந்துள்ளது.
டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். இவருடன் சில இந்திய அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
டிரம்ப் பதவியேற்பு விழா மட்டுமல்லாமல், அவர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களுடன் மீட்டிங்கும் நடக்க உள்ளது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சமீப காலமாக நல்ல உறவு நிலவி வருகிறது. வணிகம் முதல் முதலீடுகள் வரை அமெரிக்காவிற்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு கொண்டு வரப்போவதாக கூறியுள்ள சில சட்ட திட்டங்கள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது.
இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழா மற்றும் அதிகாரிகளுடனான மீட்டிங் நட்பு பாலத்திற்கு தொடக்கமாக அமையலாம்.