ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக புறக்கணிப்பு
அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பை அவமதித்துவிட்டார் முதல்வர்: ஆளுநர் மாளிகை
இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.