சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
பொங்கல் விடுமுறை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை : தைப்பொங்கல் திருநாள் வரும் செவ்வாய்க்கிழமை(ஜன. 14) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொது விடுமுறை நாளான அன்று, சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை(ஜன. 14) நாளில், புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி / சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்படும் கால அவகாசத்தின்படி இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.