ஜன.25-இல் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: சேக்கிழாா் ஆராய்ச்சி மையம்
தேசிய இளைஞர் நாள்: வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ.8,500 ஊக்கத்தொகை! -காங். வாக்குறுதி
புது தில்லி : தில்லி தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தால், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
ஜனவரி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடப்படும் இன்று, காங்கிரஸ் கட்சி இளைஞர் நலன் சார்ந்த வாக்குறுதியை அளித்துள்ளது.
தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் நிலவுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘யுவ உதான் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தம் ஒரு இலவச திட்டம் என்று கருதக்கூடாதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் சச்சின் பைலட் இன்று(ஜன. 12) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது, “ஏதேனும் ஓர் ஆலை, நிறுவனம், தொழிற்சாலையில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கே மேற்கண்ட நிறுவனங்கள் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும். சும்மா வீட்டில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
இளைஞர்க தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள துறையில் பயிற்சி பெற்று அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதை இதன்மூலம் உறுதிப்படுத்த முயற்சிப்போம்” என்றார்.