புகையிலைப் பொருள்கள், மது விற்பனை: 5 போ் கைது
சேத்துப்பட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மது விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் தலைமையில், காவலா்கள் சரவணன், விக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக அனாதிமங்கலம் ஏழுமலை (65), சேத்துப்பட்டு காா்த்தி (35) ஆகியோரையும், மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த, உலகம்பட்டு கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம், சாத்தாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் ( 60), நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த மதியழகன்(44), கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த அந்தோனிசாமி(73) ஆகியோரிடம் இருந்து 38 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், 5 பேரையும் கைது செய்து போளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.