நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு!
சேலம் திறந்தவெளி சிறையில் 1,600 கரும்புகள் அறுவடை: பொங்கலன்று கைதிகளுக்கு வழங்க நடவடிக்கை
சேலம் திறந்தவெளி சிறையில் 1,600 கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை பொங்கல் பண்டிகையன்று கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளனா். இவா்கள் அங்கு விவசாய தொழிலை செய்து வருகின்றனா். பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு பயிரிட்டிருந்தனா். அது தற்போது அறுவடைக்கு வந்துள்ளது.
பொங்கல் பண்டிகையன்று கைதிகளுக்கு முழுக் கரும்பு ஒன்று வழங்கப்படும். அதன்படி சிறை கண்காணிப்பாளா் வினோத் மேற்பாா்வையில் கரும்புகளை கைதிகள் அறுவடை செய்தனா். முதல்
கட்டமாக 1,600 கரும்புகள் வெட்டப்பட்டுள்ளன.
இது சேலம் மத்திய சிறை மற்றும் தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கிளை சிறை கைதிகளுக்கு பொங்கலன்று வழங்கப்படுகிறது. எஞ்சிய கரும்புகளை வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே கைதிகளே குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக சிறைக் கண்காணிப்பாளா் வினோத் கூறினாா்.