செய்திகள் :

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது: உச்ச நீதிமன்றம்

post image

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனது மகனை காதலித்த பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு தாயின் மீது வழக்குப் பதியப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி வி நாகரத்னம், சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு, மேல்முறையீடு செய்த பெண்ணின் மகனுக்கும், உயிரிழந்த அவரது காதலிக்கும் இடையேயான தகராறு காரணமாக அவர் உயிரிழந்ததால் பதியப்பட்டது. அதில், உயிரிழந்த பெண்ணை தவறாகப் பேசி, திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக மேல்முறையீடு செய்த பெண்ணின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் சரியானவை என்று எடுத்துக் கொண்டாலும், மேல்முறையீடு செய்தவருக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

”ஐபிசி பிரிவு 306ன் கீழ் அந்தப் பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் மறைமுகமாக இருக்கின்றன. மேல்முறையீடு செய்தவர் மீது இயற்கையாக எந்தக் குற்றமும் இல்லை. தற்கொலை செய்துகொண்ட பெண் அவருக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்று துரதிஷ்ர்டவசமாக முடிவெடுத்துள்ளார்.

மேல்முறையீடு செய்தவர் இறந்த பெண்ணிற்கும் அவரது மகனுக்குமான உறவை முறித்துக் கொள்ள எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று விசாரணை பதிவுகள் மூலம் தெரிய வருகின்றது.

இதையும் படிக்க | குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!

இறந்த பெண்ணின் குடும்பத்தினரே இந்த உறவு குறித்து மகிழிச்சியின்றி இருந்துள்ளனர். இறந்த பெண்ணிற்கும் தனது மகனுக்குமான திருமணத்திற்கு ஒப்புதல் வழங்காதது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது.

மேலும், அந்தப் பெண் இறந்தாலும் காதலனை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறுவதும் த்ற்கொலைக்குத் தூண்டுவதாகாது. ஐபிசி 306 பிரிவின் படி, இறந்த நபரை நேரடியாக தற்கொலைக்குத் தூண்டும் சூழலை உருவாக்குவதே தண்டனைக்குரியதாகக் கருதப்படும்” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

ஹிந்தி கற்க கட்டாயப்படுத்த முடியாது, ஆனால்...: ஆர்எஸ்எஸ் இணைச் செயலர்

ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ ... மேலும் பார்க்க

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் பால்கனியில் விளைய... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முடா நில ஒதுக்கீடு வழக்கில் கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பார்க்க

நாட்டிலேயே முதல் மாநிலம்: உத்தரகண்டில் அமலானது பொது சிவில் சட்டம்!

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சுதந்திர நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியிருக்கிறது.உத்தரகண்ட் மாநிலத்தில் பொது ச... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜ... மேலும் பார்க்க

15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு வ... மேலும் பார்க்க