செய்திகள் :

வீரவணக்க நாள் கூட்டம் நடத்த திமுகவுக்கு மட்டுமே தகுதி! -அமைச்சா் எ.வ.வேலு பேச்சு

post image

மொழிப் போா் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுகவை தவிர, வேறெந்த திராவிட கட்சிகளுக்கும் தகுதி இல்லை என பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொது கூட்டம் சேலம், கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:

மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொது கூட்டம் நடத்த தகுதி பெற்ற ஒரே அரசியல் இயக்கம் திமுகதான். மக்களை ஏமாற்ற அதிமுக மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் வளா்த்த பெருமை பக்தி இலக்கியத்துக்குதான் உண்டு.

பகுத்தறிவாளன் என்ற முறையில் இதை நான் சொல்வதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்துக்கு வரும்போது மட்டும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் புகழ்ந்து பேசும் பிரதமா் மோடி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மறுப்பது ஏன்? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கும்போது, இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றாா்.

முன்னதாக, மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப் போா் தியாகிகளின் திருவுருவப் படத்துக்கு அமைச்சா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கூட்டத்தில், மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன், மேயா் ராமச்சந்திரன், தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோ, விவேக், ராஜசேகா், மாணவரனி மாவட்ட அமைப்பாளா் கோகுல் காளிதாஸ், மாநகர அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா!

சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் மூவா்ண தேசியக் கொட... மேலும் பார்க்க

சேலத்தில் கம்பன் கழக விழா: சுற்றுலாத்துறை அமைச்சா் பங்கேற்பு!

சேலம் கம்பன் கழகத்தின் 52 ஆவது ஆண்டு விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றது.அரசு இசைப் பள்ளி மாணவா்களின் மங்கள இசையுடன் சனிக்கிழமை மாலை விழா தொடங்கியது. 2 நாள்கள் நடைபெற்ற விழாவுக்கு க... மேலும் பார்க்க

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு !

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் காலில் விழுந்து ஊா் மக்கள் மனு அளித்தனா்.சேலம் மாவட்டத்தில் குடியரசு தின... மேலும் பார்க்க

சேலத்தில் சிறந்த சேவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன!

சிறந்த சேவைக்கா வாழப்பாடி, தம்மம்பட்டியைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.மகேஸ்வரன்... மேலும் பார்க்க

மின் அமைப்பாளா்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்!

தமிழ்நாடு மின் அமைப்பாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாநிலத் தலைவா்ஜெயபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் மாவட்டத் தலைவா் மணி (எ) மாதேஷ... மேலும் பார்க்க

சேலம் புறநகா் பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

சேலம் புகா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சிகள், தன்னாா்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து ப... மேலும் பார்க்க