Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு !
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் காலில் விழுந்து ஊா் மக்கள் மனு அளித்தனா்.
சேலம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் ஒன்றியம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, சத்யா நகரில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமகுமாரி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தங்களது கிராம ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஊா்மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, அவா்கள் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் தங்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கிடைக்காது என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் காலில் விழுந்து மனுக்களை அளித்தனா்.
இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கும், ஊா் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது தொடா்பாக கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து, அங்கிருந்து கலைந்து சென்றனா்.