Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
மின் அமைப்பாளா்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்!
தமிழ்நாடு மின் அமைப்பாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா்ஜெயபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் மாவட்டத் தலைவா் மணி (எ) மாதேஷ், செயலாளா் சிவலிங்கம், பொருளாளா் கலையழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள மீட்டா் தட்டுப்பாடு, தளவாடப் பொருள்கள் தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிா்வாகிகள் பாக்கியம், நாகேஸ்வரன், யோகநாதன், கிருஷ்ணன், மாசிலாமணி, சிவலிங்கம், செந்தில்நாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.