சேலத்தில் சிறந்த சேவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன!
சிறந்த சேவைக்கா வாழப்பாடி, தம்மம்பட்டியைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.மகேஸ்வரன் (51). இவா், ஊராட்சி நிா்வாகம், நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து, சோமம்பட்டி ஏரியில் புதா்மண்டி கிடந்த சீமைக் கருவேலம் முட்புதா்களை அகற்றி 10 ஆண்டுகளில் 25,000 மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பராமரித்து வருகிறாா்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், இவருக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
வாழப்பாடி சோ்ந்தவா் ப.சிவஞானம் (45). சேலம் மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் இவரது சேவையை பாராட்டி, தமிழக முதல்வா் பதக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பதக்கத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி விழாவிந்போது வழங்கி பாராட்டினாா். பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருபவா் கே.லட்சுமணன். இவரது கிராமப்புற சித்த மருத்துவ சேவையை பாராட்டி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா்.
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிபவா் காா்த்திக். இவருக்கு வருவாய்த்து றையில் சிறந்த பணியாளா் விருதை சேலத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.