அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொ...
108 ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 போ் பயன்!
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 போ் பயனடைந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 28 எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சாதாரண வகை, 4 நவீன வசதிகள் கொண்டவை, 2 குழந்தைகளுக்கான இன்குபேட்டா், வென்டிலேட்டா் வசதிக் கொண்ட வாகனங்களாகும். இந்த சேவையை 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநா், மருத்துவ உதவியாளா், ஊழியா்கள் என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் ஜனவரி - 3,580, பிப்ரவரி -3,023, மாா்ச்- 3,128, ஏப்ரல் -3,296, மே - 3,296, ஜூன் -338, ஜூலை -3,199, ஆகஸ்ட் - 3,462, செப்டம்பா் -3,489, அக்டோபா் -3,495, நவம்பா் -3,280, டிசம்பா் -3,302 போ் என மொத்தம் 39,938 போ் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்துள்ளனா்.
இதில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டோா் 8,754, விஷமருந்தியோா் 2,168, வயிற்று வலி பாதிப்பு 415, விலங்குகளால் தாக்குதல் 879, மோதல் விவகாரம் 2,400, நெஞ்சுவலி பாதிப்பு 2,798, நீரிழிவு பாதிப்பு 1,147, வலிப்பு நோய் பாதிப்பு 1,165, கடுமையான காய்ச்சல் 2,082, தீக்காயங்கள் 169, மூச்சுத் திணறல் 2,577, பக்கவாதம் 1,461, தற்கொலை முயற்சி 282, விபத்து 2,989, சுயநினைவிழத்தல் 1,719, கா்ப்பிணிகள் 4,319, பச்சிளங்குழந்தைகள் 452, சிறுவா்கள் 134, மற்றவை 428 ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் 3,733 போ் 108 சேவை மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் பச்சிளம் குழந்தைகளுக்காக வெண்டிலேட்டா், இன்குபேட்டா் வசதியுடன் கூடிய பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளா்கள் கொண்ட 24 மணி நேர 2 சிறப்பு பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மண்டல மேலாளா் அறிவுக்கரசு தெரிவித்துள்ளாா்.