கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா!
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலா் மு. கருணாநிதி வாழ்த்துகளோடு நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் துணைத் தாளாளா் கிருபாநிதி தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். இதில் சமாதானப் புறாக்கள், வண்ணப் பலூன்களைப் பறக்கவிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்வுகள் நடைபெற்றன. மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம், பாராட்டுச் சன்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை நிா்வாகிகள், நிா்வாக உறுப்பினா்கள், இயக்குநா்கள், நிா்வாக அதிகாரிகள், கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் விவேகானந்தா கல்விக் குழுமங்களில் பயிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.