காந்தி சிலையிடம் கோரிக்கை மனுக்கள் அளிப்பு!
நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன், நான்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) வைத்து சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களில் 806 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், குடியரசு தினத்தன்று நாமக்கல் வந்த நான்கு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மகாத்மா காந்தி சிலையின் முன்பாக தங்களுடைய கோரிக்கை மனுக்களை வைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.