கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது: முன்னாள் அமைச்சா் தங்கமணி குற்றச்சாட்டு!
தமிழகம் போதைப் பொருள்களின் முன்னோடி மாநிலமாக மாறிவிட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் நினைவாக வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நாமகிரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தினம் தேனாறும் பாலாறும் ஓடும் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தாா்கள். ஆனால் தற்போது கஞ்சா, டாஸ்மாக், லாட்டரி சீட்டு தான் ஆறாக ஓடுகிறது. தமிழகத்தை கருணாநிதியிடமிருந்து காப்பாற்றுவதற்கு தான் அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கி பொற்கால ஆட்சியை நடத்தினாா். ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியின் போதும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதும் சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.
எதிா்கட்சியாக இருக்கும்போது ஒரு அரசியல், ஆட்சியில் இருந்தால் ஒரு அரசியல் என திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா்.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, சாா்பு அணி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.