அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொ...
கள்ளக்குறிச்சி குடியரசு தினவிழா: ஆட்சியா் கொடியேற்றினாா்!
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களை வழங்கினாா். பின்னா், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, நில அளவைத் துறை, ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 377 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த வழங்கினாா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.