கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
5 நிமிஷங்களில் கட்டைவிரலில் திருவள்ளுவா் சிலை படம்: மாணவருக்கு பாராட்டு!
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, அந்தச் சிலையை தனது கட்டை விரலில் 5 நிமிஷங்களில் திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் அரவிந்த் வரைந்தாா்.
இவருக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் முரளி கிருஷ்ணன், கஜேந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியா் நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
மாணவா் அரவிந்த் பள்ளியின் பகுதி நேர ஓவிய ஆசிரியா் செல்வம் வழிகாட்டுதலின்படி திருவள்ளுவா் சிலை ஓவியத்தை வரைந்துள்ளாா்.