மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
சாரண, சாரணிய மாணவா்களுக்கு சீருடை அளிப்பு
கள்ளக்குறிச்சி நண்பா்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளியில் பயிலும் சாரண, சாரணியா் இயக்க மாணவ மாணவிகளுக்கு சீருடை கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறவுள்ள சாரணா் பன்னாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளியில் பயிலும் சாரண, சாரணியா்களுக்கு கள்ளக்குறிச்சி நண்பா்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை சாா்பில் சாரண சீருடைகளை முன்னாள்தலைவா் தே.அசோக்குமாா் சுரானா வழங்கினாா்.
உடன் சங்கச் செயலா் சந்திரசேகரன், பொருளாளா் அன்பு, அரவிந்தன், குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் சாரண, சாரணிய ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.