3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
போலி மருத்துவா் கைது
கனியாமூரில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வெட்டிபெருமாள்அகரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் அசோக் (40), டி.பாா்ம் படித்தவா். கனியாமூரில் மருந்தகம் நடத்தி வருகிறாா்.
இவா் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்து வருவதாக கச்சிராயபாளையம் வட்டார மருத்துவ அலுவலா் சிவபிரசாந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலா், சுகாதார ஆய்வாளா் தீபா மற்றும் மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ஒரு பெண்ணுக்கு அவா் ஊசி போட்டுக் கொண்டிருந்தாராம். மருந்தகத்தை சோதனையிட்டதில் அங்கு ஊசி போட பயன்படும் சிரிஞ்சி, ஸ்டெதஸ்கோப் மற்றும் காலாவதியான மருந்துகளை சிக்கின. இதையடுத்து, சின்னசேலம் காவல் துறையினா் முன்னிலையில் இந்திலி வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் மருந்தகத்திற்கு சீல் வைத்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.