சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
ஆத்தூரில் நெகிழிப் பைகள் பறிமுதல்
ஆத்தூா் நகராட்சி, ஏத்தாப்பூா் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூரில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவின்பேரில், பேருந்து நிலையம், வணிக நிறுவனங்களில் நகராட்சி சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். சோதனையின்போது 300 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்து, அவற்றை வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
அதுபோல ஏத்தாப்பூா் பேரூராட்சியில் மன்றத் தலைவா் காசி அன்பழகன் தலைமையில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலரான தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா், துணைத் தலைவா், செயல் அலுவலா், உறுப்பிா்கள் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.