வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு... டிரம்ப்புக்கு சவால்விடும் க...
நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாற உள்ள ஹிந்துஸ்தான் ஜிங்க்!
புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் அடுத்த நிதியாண்டில், நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரகு நிறுவனமான வென்ச்சுரா செக்யூரிட்டீஸின் கூற்றுப்படி, உலோகங்களுக்கான உலகளாவிய தேவை (துத்தநாகம் மற்றும் ஈயம்) 6 அல்லது 7 சதவிகிதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா துத்தநாகத்தின் நிகர ஏற்றுமதியாளராக உள்ள நிலையில் ஈயம் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவை இரண்டும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்-க்கு சாதகமானவையே.
துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஜிங்க், செப்டம்பர் காலாண்டு இறுதியில் சுமார் ரூ.6,000 கோடியிலிருந்து மார்ச் இறுதிக்குள் அதன் கடனை சுமார் ரூ.2,000 கோடியாக குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனமானது அதன் உற்பத்தியை 2027ல் 1.2 மில்லியன் டன்களாக விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட துத்தநாகம் அல்லது ஈயம் உற்பத்தி 817/216 கேடி-லிருந்து 931/240 கேடி-ஆக அதிகரிக்கும். அதே வேளையில் வெள்ளி 746 டன்னிலிருந்து 800 டன்னாக உற்பத்தி அதிகரிக்கும்.
மின்சார செலவு சேமிப்பிலிருந்து நிறுவனம் பயனடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், 2027ல் வரிக்கு பிந்தைய லாபகமாக அதன் வருவாய் ரூ.11,402 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.