செய்திகள் :

அழைப்புக்காக மட்டும் கட்டண திட்டங்கள்: ஜியோ, ஏா்டெல், விஐ அறிமுகம்

post image

முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் (ப்ரிபெய்ட்) வாடிக்கையாளா்களுக்காக அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் வழங்குவதற்கான புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இணையதளப் பயன்பாடு நாளுக்கு நாள் வளா்ந்து வந்தாலும், அதை அதிகம் பயன்படுத்தத் தேவையிராதவா்கள், பெரும்பாலும் பிராண்ட்பேண்ட் இணையதள இணைப்பை வை-ஃபை மூலம் பெறுவோா் போன்றவா்களுக்கு தங்களின் கைப்பேசிகளில் இணையதளத் திட்டங்கள் தேவைப்படுவதில்லை.ஆனால், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் அனைத்து சேவை திட்டங்களிலும் இதுவரை இணையதள இணைப்பு வசதிகள் அளிக்கப்பட்டு, அதற்கும் சோ்த்து கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. மொபைல் இணையதள வசதி தேவையில்லாதவா்களுக்கு அதைத் தவிா்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இணையதள வசதி இல்லாமல், வெறும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் சேவைகளை மட்டும் அளிக்கும் கட்டண திட்டங்களை தொலைத்தொடா்பு அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் துறை ஒழுங்காற்று அமைப்பான டிராய் தனது விதிமுறைகளில் கடந்த மாதம் திருத்தம் செய்தது.

அதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் அத்தகைய திட்டங்களை தற்போது அரிவித்துள்ளன. அதன்படி, ரூ.499-இல் 84 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 900 குறுந்தகவல்களை அனுப்பும் வசதியை அளிக்கும் கட்டண திட்டத்தையும் ரூ.1,959-இல் 365 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3,600 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான கட்டண திட்டத்தையும் ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனமும், ரூ.458 (84 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 1,000 குறுந்தகவல்கள்), ரூ.1,958 (365 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 3,600 குறுந்தகவல்கள்) ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.ரூ.1,460-இல் 270 நாள்களுக்கு வரம்பற்ற தொலைபேசி அழைப்புகள், 100 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான வசதி அளிக்கும் கட்டண திட்டத்தை வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.

நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாற உள்ள ஹிந்துஸ்தான் ஜிங்க்!

புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் அடுத்த நிதியாண்டில், நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.தரகு நிறுவனமான வென்ச்சுரா செக்யூரிட்டீஸ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு ரூ. 824 கோடி ஊதியம் பெற்ற ஸ்டார்பக்ஸ் சிஇஓ!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோலுக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ரூ. 824 கோடி ஊதியமாக வழங்கியுள்ளது. அமெரிக்க சந்தையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் வகையிலான அவ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு!

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

பன்முக சொத்து ஒதுக்கீட்டுத் திட்டம்: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்

இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... மேலும் பார்க்க

கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம்!

சென்னை: கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்படும் என்று மருந்துகள் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப... மேலும் பார்க்க

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து 623.98 பில்லியன் டாலராக உள்ளது.இந்த வீழ்ச்சியால் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பு 2.87... மேலும் பார்க்க