செய்திகள் :

4 மாதங்களுக்கு ரூ. 824 கோடி ஊதியம் பெற்ற ஸ்டார்பக்ஸ் சிஇஓ!

post image

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோலுக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ரூ. 824 கோடி ஊதியமாக வழங்கியுள்ளது.

அமெரிக்க சந்தையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் வகையிலான அவரின் பணியை அங்கீகரிக்கும் விதமாக இதனை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தேநீர், காபி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சிப்போட்லே மெக்சிகன் கிரில் கடந்த ஆண்டுடன் அப்பதவியில் இருந்து விடைபெற்றார். அவருக்குப் பிறகு பிரையன் நிக்கோல் கடந்த செப்டம்பர் மாதம் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை குறைந்திருந்த நிலையில், அதனை அதிகரிக்கும் நோக்கத்தில் பிரையன் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே அவர் பொறுப்பேற்ற சில மாதங்களில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் விருப்ப நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் மாறியது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஸ்டார்பக்ஸ் பானங்களை தனது பணியாளர்களுக்காக குத்தகை எடுத்தது. நிக்கோலின் உக்தியால் தற்போது உலகளாவிய நிறுவனமாகவும் ஸ்டார்பக்ஸ் மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மட்டும் 96 மில்லியன் (ரூ. 827 கோடி) டாலரை நிக்கோலுக்கு ஊதியமாக வழங்கியுள்ளது ஸ்டார்பக்ஸ். இதோடு மட்டுமின்றி ஒப்பந்தம் கையெழுத்தான முதல் மாத இறுதியில் 5 மில்லியன் டாலரைக் கொடுத்துள்ளது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பிரையன் நிக்கோல் இருப்பதால், வாஷிங்டன் தலைமையகத்துக்கு அவர் வந்துசெல்லும் விமான செலவுக்காக 72,000 டாலரை வழங்கியுள்ளது. தனிப்பட்ட பயணங்களுக்காக நிறுவனத்தின் ஜெட் விமானத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்காக 19,000 டாலர்களை வழங்கியுள்ளது.

பிரையன் நிக்கோலின் ஆண்டு வருவாய் 113 மில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் 20 தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக பிரையன் நிக்கோல் மாறியுள்ளார்.

இதையும் படிக்க | கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! டென்மார்க் - அமெரிக்கா தலைவர்களிடையே காரசார விவாதம்!

அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.410.93 கோடி ஆக உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.200.89 கோடியாக இ... மேலும் பார்க்க

கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் ந... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.86.33 ஆக முடிவு!

மும்பை: டாலர் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்குகளில் மெத்தன போக்கும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை அதிக அளவில் எடைபோட்டதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 11 காசுகள் சரிந்த... மேலும் பார்க்க

செபி அமைப்பின் புதிய தலைவர் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதவி புரி புச் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அறிவித்... மேலும் பார்க்க

சரிவில் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை75,700.43 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 82... மேலும் பார்க்க

வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

பங்குச் சந்தை கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் வணிக நாளான இன்றும் சரிவுடனே தொடங்கியுள்ளது. இன்று காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்... மேலும் பார்க்க