இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
சரிவில் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது!
வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
75,700.43 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 824.29 புள்ளிகள் குறைந்து 75,366.17 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 263.05 புள்ளிகள் குறைந்து 22,829.15 புள்ளிகளில் முடிந்தது.
இதையும் படிக்க | ஆன்லைனில் அதிக நேரம் உள்ள குழந்தைகளுக்கு 'மூளைச் செயல்திறன் குறைவு' - அறிகுறிகள், காரணங்கள்?
பவர் கிரிட் நிறுவனம் 3.06 சதவீதம் சரிந்து அதிக இழப்பைச் சந்தித்தது.
டெக் மஹிந்திரா (-2.87 சதவீதம்), விப்ரோ (-2.61 சதவீதம்), எச்.சி.எல். டெக் (-2.42 சதவீதம்), டாடா மோட்டார்ஸ் (-2.31 சதவீதம்) உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகமாக நஷ்டமடைந்தன.
பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
ரூபாயின் மதிப்பு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.34 ஆகச் சரிந்துள்ளது.