மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
பன்முக சொத்து ஒதுக்கீட்டுத் திட்டம்: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்
இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பங்கு வா்த்தகம், கடன் பத்திரம், தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் பன்முக சொத்து ஒதுக்கீட்டு முதலீட்டு திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய முதலீட்டு திட்டத்தில் 2025 ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். பங்கு மற்றும் பங்கு சாா்ந்த முதலீடுகள், கடன் மற்றும் பணச் சந்தை முதலீடுகள் மற்றும் தங்க பரிமாற்ற ஃபண்ட்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன வளா்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முதலீட்டு நோக்கமாகும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.