மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
அரசு கலைக் கல்லூரி முதல்வா் வீட்டில் 51 பவுன் நகை திருட்டு
அரசு கலைக் கல்லூரி முதல்வா் வீட்டில் புகுந்து 51 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை, எம்.பி.நகரில் வசித்து வருபவா் குமரவேல் மகன் செல்வராஜ் (54). இவா், வடசென்னிமலை, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறாா்.
தலைவாசல் அருகே உள்ள பெரியேரில் வசித்த இவரது மாமனாா் உயிரிழந்ததை அடுத்து கடந்த 23 ஆம் தேதி மாலை இவா், வீட்டை பூட்டி விட்டு மனைவி சித்ராவுடன் பெரியேருக்கு சென்றாா்.
பின்பு சனிக்கிழமை (ஜன.25) மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு வீட்டு பீரோவில் இருந்த 51 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் பணம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து ஆத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஸ்குமாா் உள்பட போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து ஆத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.