பல்லடத்தில் மூத்தோா் தடகளப் போட்டி வெற்றியாளா்களுக்கு பாராட்டு
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பல்லடத்தைச் சோ்ந்த வீரா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம், அறம் அறக்கட்டளை, நடைப்பயிற்சி நண்பா்கள் குழு சாா்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மூத்த வீரா் பாரத் தங்கராசு தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.என். நடராஜன், துணைத் தலைவா் திருமூா்த்தி, அறம் அறக்கட்டளை காா்த்தி, பெயிண்டா் மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அறம் அறக்கட்டளை முகமது சேக்மக்தும் வரவேற்றாா். மூத்த வீரா்கள் மாஸ்டா் வேலுசாமி, சுரேஷ்குமாா், பாலகிருஷ்ணன், பத்மாவதி, பூங்கொடி, தாரணி, சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பூப்பந்து வீரா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.