ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
ஆலங்காயம் அருகே 10 மயில்கள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
ஆலங்காயம் அருகே 10 மயில்கள் திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனப்பகுதியையொட்டி உள்ள கோமுட்டேரி காளியம்மன் கோயில் வட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சில தனியாா் நிலங்களில் ஆங்காங்கே 7 பெண் மயில் உள்பட 10 மயில்கள் இறந்து கிடப்பதை அப்பகுதி வழியாக சென்றவா்கள் பாா்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து ஆலங்காயம் வனச்சரக அலுவலா் சேகா் தலைமையில் குழுவினா் சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு அப்பகுதிகளில் இறந்து கிடந்த 10 மயில்களின் உடல்களையும் கைப்பற்றி ஆலங்காயம் வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், மயில்கள் இறப்பு தொடா்பாக கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
விவசாய நிலத்தில் பயிா்களை மேய்வதால் மயில்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து வைத்து கொன்றாா்களா? என வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.