சூதாட்டம்: 6 போ் கைது காா், பைக் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஏரியூா் பகுதியில் சூதாடியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து காா், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாடி வருவதாக திருப்பத்தூா் எஸ்.பி.. ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் படி தனிப்பிரிவு போலீஸாா் சம்பவ இடம் சென்று பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சின்னமோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்(32). அதே பகுதியைச் சோ்ந்த அசோகன்(34), சிவா(29), பழனி(40), மல்லானூரைச் சோ்ந்த சண்முகம்(35), ரமேஷ்,(47) ஆகிய 6 பேரை பிடித்து அவா்களிடம் இருந்து சொகுசு காா், பைக் மற்றும் ரூ.15,000 ரொக்கக்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். மேலும் அங்கிருந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.