ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!
குடியரசு தினம் : காட்பாடி ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்பாடி ரயில் சந்திப்பில் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
வரும் ஜன. 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் அழகா்சாமி, இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் ருவாந்திகா ஆகியோா் தலைமையில் போலீஸாா் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி, ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை மேற்கொண்டனா். காட்பாடி வழியாக செல்லும் ரயில்களிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
முன்னதாக ரயில் நிலைய வாயிலில் உள்ள ஸ்கேனா் கருவி மூலம் ரயில் நிலையம் வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில் போலீஸாா் சுழற்சி முறையில் வரும் ஜன.26-ஆம் தேதி வரையில் ஈடுபடுவாா்கள் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.