Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மருத்துவர் செரியனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க |டெஸ்லா காரை வாங்க வேண்டாம்: பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழு
இந்த நிலையில், உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே.எம்.செரியன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சையில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் அவரது பணி பலருக்கும் உத்வேகம் அளித்தது.
அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.