மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த ...
சைஃப் அலிகான் வழக்கில் புதிய சிக்கல்! கைரேகைகள் பொருந்தவில்லை!
மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது.
சைஃப் அலிகான் இல்லத்தில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில் ஒன்றுகூட குற்றவாளி என கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா கைரேகையுடன் பொருந்தவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகா் பகுதியான பாந்த்ராவில் கடந்த 19ஆம் தேதி நடிகா் சைஃப் அலிகான் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பிறகு, சைஃப் அலி கானைத் தாக்கியதாக வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா என்ற 30 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தான் நுழைந்தது நடிகாா் சைஃப் அலி கானின் வீடு என்பது ஷரீஃபுல்லுக்கு தெரியவில்லை. திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் அவா் நுழைந்துள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் சைஃப் அலிகான் குடியிருப்பில் 19 கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதில் ஒன்றில் கூட முகமது ரோஹில்லாவின் கைரேகையுடன் பொருந்தவில்லை என சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மேலும் சில கைரேகைகளை சேகரித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.