தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!
Serial Update: ``சுயமரியாதை இழக்கிறேன்னு தோணுச்சு; அதான் இந்த முடிவு" - ஜோவிதா லிவிங்ஸ்டன்
ஜீ தமிழ் சேனலில் ஓளிபரப்பாகி வந்த 'மௌனம் பேசியதே' சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். சீரியல் தொடங்கி நான்கு மாதங்களே ஆகியிருக்கும் சூழலில் அவரது வெளியேற்றம் தொடரைப் பார்த்து வந்த ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
முன்னதாக சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து முறைப்படி அறிவித்திருந்த தன்னுடைய அறிவிப்பில்,
``சமீப சில நாட்களாக என்னுடைய துளசி கேரக்டர் எனக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. ரொம்பவே சுயநலமிக்கதாகவும் எப்போதும் மனச்சோர்வு தரக்கூடியதாகவும், இதைவிடவெல்லாம் மேலாக நம் கலாசாரத்துக்கு எதிராகச் செயல்படக்கூடியதாகவும் மாறத் தொடங்கியது. இந்த நிலை மாறும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதனால் தொடர்ந்து அத்தகைய ஒரு கேரக்டரில் நடிப்பது எனக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் ஏற்புடையதா தெரியல.
தவிர கொஞ்ச நாளாகவே ஓய்வில்லாம நடிச்சிட்டிருந்தது உடலளவிலும் சோர்வை உண்டாக்கியிருக்கு.மேலும் நேர்மையாகவும் சுயமரியாதையாகவும் வாழணும்னு ஆசைப்படறவ நான். சமீப காலமா இந்தக் குணங்கள்ல இருந்து விலக என்னை அனுமதிச்சிட்டேனோனு ஒரு உணர்வு வரத் தொடங்குச்சு. அதனால ஒரு கசப்பான புன்னகையுடன் இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டியதாகிடுச்சு. இதுவரை எனக்கு ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என் நன்றி' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வெளியேற்றம் தொடர்பாக சீரியலின் யூனிட் தரப்பில் சிலரிடம் பேசியபோது, ``சேனல்ல முக்கியமான பொறுப்புகள்ல சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு. இந்த மாற்றங்களின் தொடர்ச்சிதான் இது. இன்னும்கூட சில சீரியல்கள்ல அதிரடி மாற்றங்கள் நிகழலாம்னு சொல்றாங்க. ஜோவிதாவைப் பொறுத்தவரை அவர் நடிச்சிட்டிருக்கும் போதே வேற ஹீரோயின் தேடத் தொடங்கியிருக்காங்க. அதனாலதான் முந்திக்கிட்டு அவர் வெளியேறியதோட, சுயநலம் ரொம்ப முக்கியம்னு ஒரு வார்த்தையையும் குறிப்பிட்டிருக்காங்க" என்கின்றனர்.