புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட...
Serial Update: `பெருசா எதிர்பார்த்த நேரம் சீரியலை முடிச்சுட்டாங்க' - மலர் சீரியல் வில்லன் பவித்ரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மலர் சீரியல் திடீரென முடிவடைந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து அந்த சீரியலைப் பார்த்து வந்த ரசிகர்கள் மட்டுமல்லாது அதில் நடித்து வந்த நடிகர் நடிகைகளுமே வருத்தத்தில் இருக்கிறார்கள்.
தொடரில் வில்லனாக நடித்து வந்த பவித்ரனிடம் சீரியல் நிறைவுபெற்றது குறித்துக் கேட்டோம்.
‘’இந்த சீரியல் முதல்ல மூன்றரை மணிக்கு ஒளிபரப்பாச்சு. பிறகு 1 மணிக்கு மாத்தினாங்க. பிறகு 11. மணிக்கு மாற்றப்பட்டது. கடைசியா இப்ப திடீர்னு முடிச்சு விட்டுட்டாங்க. ரெண்டு வருஷம் தாண்டி ஒளிபரப்பு போயிட்டிருந்த சூழல்ல திடீர்னு முடிச்சது எல்லாரையும் கொஞ்சம் வருத்தப்பட வச்சிடுச்சு.
ஹீரோ ஹீரோயின்கூட இந்த சீரியல்ல மாறின நிலையிலும் நான் உட்பட சில ஆர்ட்டிஸ்டுகள் முதல் நாள்ல. இருந்து இருந்தாங்க. அவங்க எல்லாருமே சீரியலை ரொம்பவே மிஸ் பண்றோம்.
முந்தா நாள் கிளைமேக்ஸ் ஷூட்டிங்கின் போது ஆர்ட்டிஸ்டுகள் எல்லோருமே எமோஷனா இருந்தாங்க. கேக் எல்லாம் கட் பண்ணி அந்த நேரத்தை மறக்கமுடியாத மொமன்ட் ஆக்கினோம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்பவே முக்கியமான தொடர் இது ஏன்னா திருமுருகன் சார் இயக்கத்தில் `குலதெய்வம்' தொடர் மூலம் சின்னத்திரையில் நெகடிவ் ரோல்ல தான் அறிமுகமானேன். தொடர்ந்து பெரும்பாலும் நெகடிவ் ரோல்தான் கிடைச்சிட்டு வருது.
இடையில் ஜீ தமிழ்ல `யாரடி நீ மோகினி' தொடர்ல மட்டும் பாசிடிவ் ரோல் செய்தேன்.
நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்னா போதும், பாசிடிவ் நெகடிவ்னு வித்தியாசம் தேவையில்லைன்னு நடிச்சுட்டு வர்றேன்.
இதுக்கு முன்னாடி பண்ணின சீரியல்கள்ல எல்லாம் சின்னச் சின்ன வில்லத்தனங்கள் செய்துட்டு வந்தேன். அதைப் பார்த்துட்டே அடுத்த தொடர் வாய்ப்புகள் அமைஞ்சிட்டு வந்தது. இந்த சீரியல்ல கொலை பண்ணுகிற காட்சி அமைஞ்சது.
இதப் பண்ணின பிறகு இன்னும் பெரிசா வில்லன் ரோல் கிடைக்கும் நினைச்சிட்டிருந்தேன். ஆனா அதுக்குள் திடீரென முடிச்சு விட்டாங்க போங்கனு ஆயிடுச்சு. அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு’’ என்கிற பவித்ரன் சன், ஜீ தமிழ் இரண்டிலும் நடித்து விட்டாராம். விஜய் டிவி பக்கம்தான் இன்னும் போகலை. இந்த வருஷம் அந்த ஆசை நிறைவேறும்னு நம்புறேன்’ என்கிறார்.