செய்திகள் :

ஆளுநர் தேநீர் விருந்து: அதிமுக, பாஜக தலைவர்கள் பங்கேற்பு!

post image

குடியரசு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு நாள் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.

விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு நாள் வாழ்த்து தெரிவித்தார்.

தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக அரசு புறக்கணித்தது. ஆளுநர் அளிக்கும் குடியரசு நாள் தேநீர் விருந்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்காவும், பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, நடிகர் சரத் குமார், தேமுதிக சார்பாக எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கம்!

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. தவெக-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், விருந்து நிகழ்ச்சியில் தவெகவினர் கலந்து கொள்ளவில்லை.

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அண்ணா பல்கல... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்

புது தில்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க... மேலும் பார்க்க

தொடரும் மீனவர்கள் கைது- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் த... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம்! - அமைச்சர் அறிவிப்பு

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தைப்பூச நாளன்று தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைப... மேலும் பார்க்க