Siragadikka aasai : `புதிய வில்லன்... புதிய கதைகளம்!’ - அப்போ ரோகிணி?
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த இரண்டு நாட்களாக சில முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டது.
ரோகிணிக்கு ஒரு கெட்டக் கனவு. வித்யா வீட்டில் ரோகிணி, மலேசியா மாமாவாக நடிக்கும் மணி ஆகியோர் பேசிக் கொண்டிருப்பதை மீனா கேட்டிவிடுகிறார். ரோகிணி மீனாவை பார்த்ததும் பதறிப் போகிறார். மீனா இந்த உண்மைகளை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விடுவதாக சொல்ல, ரோகிணி அங்கிருந்த கத்தியை எடுத்து மீனாவை மிரட்டுகிறார். பதிலுக்கு மீனா ரோகிணியின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி ரோகிணியின் கழுத்தில் வைக்கிறார் மீனா, ரோகிணி பயந்து நடுங்கி கனவில் இருந்து எழுகிறார்.
உண்மையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விரைவில் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடை, சாலையோரத்தில் இருந்ததால் டிராஃபிக் போலீஸ் அதிகாரிகள் கடையை காலி செய்ய சொல்கின்றனர். தாத்தாவும் பாட்டியும் தங்கள் வாழ்வாதாரம் இது ஒன்று தான் என கெஞ்சுகின்றனர். ஆனால் அருண் என்ற டிராஃப்க் அதிகாரி அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறார். அவர்களின் உடைமைகளை வண்டியில் ஏற்றுகின்றனர். அந்த நேரம் பார்த்து முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றனர்.
புதிய மோதல்...
தாத்தா பாட்டிக்காக முத்து டிராஃபிக் அதிகாரியிடம் பேசுகிறார். அந்த இடத்தை காலி செய்ய சொன்னது சரி, ஆனால் அவர்களுக்கு சொந்தமான பொருட்களை மட்டும் கொடுத்துவிடுமாறு முத்து கேட்கிறார். ஆனால் அவர் எதையும் கேட்காமல் அவர்களின் உடைமைகளை வண்டியில் ஏற்றுகிறார். பாட்டி தங்களது பொருட்களைமட்டும் கொடுத்துவிடுமாறு அதிகாரியிடம் கேட்க, அவரை பிடித்து அருண் தள்ளிவிடுகிறார். அதில் பாட்டிக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வருகிறது.
முத்து கோபத்தில் அருணின் சட்டையை பிடிக்கிறார். மீனா முத்துவை அழைத்து இங்க பிரச்னை வேண்டாம் முதலில் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்கிறார்.
பாட்டியை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என மருத்துவர் சொல்ல, முத்து வீட்டில் இருப்பவர்களிடம் நடந்ததை சொல்லி ரத்தம் தேவை என்ற விஷயத்தையும் சொல்கிறார். மனோஜுக்கு அந்த பிளட் க்ரூப் தான் என ரவி சொல்ல, மனோஜ் தன்னால் ரத்தம் தர முடியாது என்கிறார். ரவியின் இந்த பேச்சால் விஜயா தவிர அனைவரும் வருத்தமடைகின்றனர். ரத்தம் கொடுக்க பயம் என்று மனோஜ் சொல்ல, விஜயாவும் அதற்கு சப்போர்ட் செய்கிறார்.
முத்து அடிக்கடி ரத்தம் கொடுப்பதை மீனா சொல்ல, ஸ்ருதி அதனை பாராட்டுகிறார். நாளுக்கு நாள் முத்து பற்றிய ஸ்ருதியின் அபிப்ராயம் மாறிக் கொண்டே வருகிறது.
ஸ்ருதி ஒரு ஐடியா சொல்கிறார். பாட்டியின் வீடியோவை எடுத்து ரத்தம் தேவை என்பதை சோசியல் மீடியாவில் போடலாம் என்கிறார். முத்து அப்படியே செய்கிறார்.
இதனிடையே டிராஃபிக் அதிகாரி அருண் கொடுத்த புகாரின் பேரில் முத்துவை போலீஸ் கைது செய்கிறது. ஆனால் முத்து மீது தவறில்லை என்பதை முத்து புரிய வைக்க, அந்த இன்ஸ்பெக்டர் அவரை அனுப்பி வைக்கிறார், கூடவே அருணை கண்டிக்கிறார்.
இதனால் கடுப்பான அருண் முத்துவை பழித்தீர்க்க நினைக்கிறார். முத்து காவல்நிலையத்தில் இருந்த சமயத்தில் அங்கு மனோஜும், ரோகிணியும் வருகின்றனர். தங்களை ஏமாற்றிய நபரைப் பற்றிய தகவலை கேட்க வருகின்றனர். அங்கு முத்துவை பார்த்ததும் மனோஜ் ஏளனம் செய்கிறார்.
மனோஜ் அங்கிருந்த காவலரின் காதில் ஏதோ சொல்ல அவர் கோபப்பட்டு மனோஜை அறைகிறார். அந்த காவலர் மற்றொரு காவலரிடம் ஏதோ சொல்ல அந்த காவலரும் மனோஜை அறைகிறார். இப்படியாக மனோஜ் மூன்று பேரிடம் அறை வாங்குகிறார். அப்படி தான் மனோஜ் காவலரின் காதில் சொன்னார் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆனாலும் சில காட்சிகளில் மனோஜ் அறை வாங்குவதும், திட்டு வாங்குவதையும் பார்க்கும்போது பாவமாக உள்ளது. சீரியலை கலகலப்பாக மாற்றுவதே மனோஜ் கதாபாத்திரம் தான். முத்துவும் மனோஜும் திரையில் தோன்றினால், கவுண்டர்மணி செந்தில் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் மனோஜ் அடி வாங்கும் காட்சிகளை குறைக்கலாம். மனோஜ் கதாபாத்திரம் சுயநலமான நபரை பிரதிபலிக்கிறது. ஆனாலும் டாக்ஸிக்கான நபரில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக முத்து ரோகிணியின் உண்மைகளை நெருங்கி வருகிறார்.
முன்னதாக ரோகிணி முத்துவின் மொபைல் போனை வித்யாவிடம் கொடுத்து கடலில் வீச சொல்கிறார். போகும் வழியில் வித்யாவின் செருந்து அறுந்துவிட, தாத்தாவின் செருப்பு தைக்கும் கடையில் செருப்பு தைத்துவிட்டு போகும் போது, வித்யா கைப்பயில் இருந்து மொபைல் போன் கீழே விழுகிறது. முத்துவின் தொலைந்துப் போன மொபைல் போன் தாத்தா பாட்டியிடம் தற்போது உள்ளது. அதனை இம்முறை கண்டிப்பாக அவர்கள் கொடுத்துவிடுவார்கள். அதன் பின்னர் கதைகளம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...