செய்திகள் :

"நாங்க ரெடி. .. வாங்க சந்திப்போம்!”-எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

post image

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

“சிறிய மாவட்டமாக இருந்தாலும் கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி- அரவக்குறிச்சி, தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லூரிகள்-நெரூர் உண்ணியூர் உயர்மட்ட பாலம், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ‌.40 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கட்டடம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கரூர் மாநகராட்சியில் முடிவடைந்த பணிகளோடு கூடுதலாக சாலை அமைப்பதற்காக ரூ. 20 கோடி, குடிநீர் திட்ட பணிகளை மேம்படுத்த ரூ 7.50 கோடி, புஞ்சை புகழூர் நகராட்சியாக தரம் உயர்வு, பள்ளப்பட்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, 476 கோடி ரூபாய் மதிப்பில் கரூரில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம், அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் நாம் அந்த பணிகளையும் தொடங்க இருக்கின்றோம். புதிய காவிரி குடிநீர் திட்டம் அதற்காக ரூ.113 கோடி நிதிகளை கொடுத்து பணிகள் தொடங்க இருக்கிறது. இருபது, முப்பது ஆண்டுகளாக கரூர் காமராஜ் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விரைவில் பிரம்மாண்டமான புதிய மார்கெட் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.

அதேபோல, சாலைகள் விரிவாக்கம், வெங்கமேடு மேம்பாலத்தில் இருந்து அரசு காலனி வழியாக வாங்கல் மோகனூர் செல்ல 13 கோடி மதிப்பீட்டில் மிகப் பிரமாண்டமான ஒரு சாலை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கரூரில் இருந்து கோவை செல்வதற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

திருவள்ளுவர் மைதானத்தில் ரூ.6.90 கோடியில் நூலகம் பிரம்மாண்டமாக அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுக்கும் கோர்ட்டுக்கு போனார்கள். படிக்கிற குழந்தைகளுக்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு, போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வதற்காக நூலகத்தை பயன்படுத்துகின்றார்கள். அந்த நூலகத்தினுடைய கட்டுமான பணிகளை கூட நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு சென்றார்கள். மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் தடை போடுகிறார்கள். நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு விரைவில் வரும். அதன் பின்னர்,புதிய பேருந்து நிலையம் கட்டப்படும். சிலர் எத்தனை தடைகளை போட்டாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்கள் நலத் திட்டங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது. உழைக்கும் மகளிருக்கு கரூரில் புதிய தங்கும் விடுதி, தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரிக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலே புதிய கட்டடம், மக்கள் நலதிட்டங்கள் என செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆனால், இன்னோரு பக்கம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என சிலர் இருக்கிறார்கள். முதலில், பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் சேர்க்க வேண்டும் என தீர்மானம் போட்டு ஆட்சியரிடம் கொடுத்து அவரும் அரசுக்கு கருத்துரு அனுப்பி அதற்கான அறிவிப்பும் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக விட்டுவிட்டு இப்போது இணைக்க வேண்டாம் என மனு கொடுக்கிறார்கள். மினிட் புத்தகத்தில் ஒரு பேப்பரை ஒட்டி தீர்மானம் போட்டது போல கொடுக்கிறார்கள். மாநகராட்சியோடு இணைப்பதற்கே இத்தனை பித்தலாட்டம்.

அந்த கட்டணம் உயர்ந்துவிடும், இது உயர்ந்து விடும் என்று கிளப்பி விடுகிறார்கள். இன்றைக்கும் சணப்பிரட்டி- வெங்கமேடு பகுதியில் பழைய கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகிறது. எங்கும் உயரவில்லை. கடந்த 2021-ல் மனு வாங்கினார்களாம். அந்த மனுவை எங்கேயோ இருந்து எடுத்தார்களாம். அப்போது, வாங்கிய மனு குப்பையில் அழுக்கே ஆகவில்லையா?. மழை, காற்று அடிக்கவில்லையா அதற்கு மேல் எந்த குப்பையும் போடவில்லையா?. இது மட்டும் தனியாக கிடந்ததா ?. அப்படியே எடுத்து தலையில் வைத்தால் ஒரு சொட்டு மண் இல்லை.

அவங்க தலைவர் ஒருவர் இருக்கிறார் . அமாவாசையை எண்ணிக்கொண்டு... எத்தனை அமாவாசை வந்தாலும், எத்தனை பௌர்ணமிகள் வந்தாலும் தமிழகத்தை தொடர்ந்து ஆளக்கூடியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு அவர் தான் முதலமைச்சர். நான் ஒரு சில கேள்விகளை மட்டும் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய ஆட்சியில் இந்த ஊருக்கு என்ன செய்தீர்கள்?. ஏதாவது ஒரு திட்டத்தை சொல்லுங்கள். ஒரு வேலையும் நடக்கவில்லை. களத்திற்கு நாங்கள் ரெடி...வாருங்கள் சந்திப்போம். எங்களது தலைவர் கூறியிருக்கிறார்கள்... 200 இல் வெற்றி என்று. கரூர் மாவட்டத்திலும் நான்கு தொகுதிகளையும் வெல்வோம். தலைவருடைய திட்டங்களை, துணை முதலமைச்சருடைய எண்ணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். புளி மூட்டைகள் பொய்யை இனியாவது யோசித்துச் சொல்ல வேண்டும். நீங்களே சொல்லி மாட்டிக் கொள்கிறீர்கள். கோமாளித்தனத்திற்கு ஒன்று கேட்கிறேன். கோவிட் காலத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். ஆறு மாத காலம் எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டிக் கிடந்தது. அன்றைய காலத்தில் மாவட்ட கழக அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டது. இரவு பகல் பாராமல் செயல்பட்டு வீடு வீடாக சென்று உதவி கரம் நீட்டியது எங்கள் நிர்வாகிகள், தோழர்கள். ஆளுங்கட்சி அல்ல... எதிர்க்கட்சி அல்ல . எந்த நேரமும் உழைப்பதற்கு, மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு- எங்கள் தலைவர் எங்களை உருவாக்கி இருக்கிறார். எதிரிகளைப் பார்க்க வேண்டியது இல்லை. சிந்திக்க வேண்டியது இல்லை. நம் இலக்கு முதலமைச்சர் அவர்களுடைய சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். வெல்வோம்” என்றார்.

மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது... எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு; கிராம சபைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (ஜன... மேலும் பார்க்க

'காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?' - காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்... மேலும் பார்க்க

Rahul Gandhi: நேதாஜி மறைவு குறித்த பதிவு; ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்த காவல்துறை

ஜனவரி 23 அன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக... மேலும் பார்க்க

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ - விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநா... மேலும் பார்க்க