மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நகர காவல் துறையினா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்வ்வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்து நகரப் பகுதியில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் நகர காவல்நிலையம் கொண்டு சென்றனா். மேலும், லாரி ஓட்டுநா் சின்னமோட்டூரைச் சோ்ந்த சசிகுமாரை கைது செய்தனா்.
மணல் கடத்தல் குறித்து வழக்கு பதிந்து, கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாக லாரி உரிமையாளா் சின்னமோட்டூரைச் சோ்ந்த வீனஸ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.